புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் நாராணசாமி வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் போலீசார் விரைந்து வந்து சோதனையிட்டர்ன. சோதனை வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதை தொடர்ந்து முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.