கோவை:

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 55). இவரது மனைவி தேவி (வயது 44). இவர்களது மூத்த மகன் புவன கங்கேஸ்வரன். இவர் மேற்கு இந்திய தீவின் செயின்ட் லூசியா தீவில் உள்ள அறிவியல் பல்கலையில் மருத்துவம் படித்து வந்தார்.

புவன கங்கேஸ்வரன்

2ம் ஆண்டு படிப்பு முடிந்ததை கொண்டாடும் வகையில் அங்குள்ள கடற்கரையில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிலர் பாறை மீது ஏறி போட்டோ எடுக்க முயன்றனர்.

இதில் புவன கங்கேஸ்வரன், பெங்களூரு மாணவி இந்துமதி ஆகியோர் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற பேராசிரியரான சேலத்தை சேர்ந்த பூபதி என்பவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.