சோனிபட்:  ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் எல்லைப்பகுதியில், சாலையில் போடப்பட்டிருந்த பேரிகார்டில், ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது கைகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது உடல் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூரமான கொலையை, பயங்கரவாரத இயக்கத்தைச் சேர்ந்த  சீக்கிய அமைப்பான நிகாங் (Nihang) அரங்கேற்றியிருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். நிகாங் என்பது, சீக்கிய பயங்கரவாதிகளின் அமைப்பாகும்.

நாடு முழுவதும வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் உ.பி.யில் நடைபெற்ற போராட்டம் வன்முறைக்களமானது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்  சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லி என்ற இடம் அருகில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் அங்குள்ள பேரிகார்டில் தொங்கிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும்,  கை வெட்டப்பட்டும் கிடந்த அந்த உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில், தங்களதுக்கு  எந்த தொடர்பும் இல்லை என விவசாயிகள் அமைப்புகள் மறுத்துள்ளன. ஆனால், அம்மாநில பாஜகவினர், விவசாயிகள்தான் இந்த கொலை செய்துள்ளனர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதே வேளையில், இந்த கொடூரமான கொலையை, பயங்கரவாத சீக்கிய அமைப்பான நிகாங் செய்திருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அவர்கள்தான் இதுபோன்ற கொடுரமான நிகழ்வுகளை செய்பவர்கள் என்று கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நபர் பெயர் லாக்பீர் சிங் என்பது தெரிய வந்துள்ளது. இவர்  சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி நிஹாங்ஸ் அமைப்பைச் சேர்நத்வர்கள் லாக்பீர் சிங்கை அடித்து கொன்றதாக அங்கிருந்த வரும் ஊடக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ள காவல்துறையினர், கொரோனா பொதுமுடக்கத்தின் போது, பாட்டியாலாவில், பாஸ் காட்டும்படி, ஒருவரை கேட்டபோது, அந்த போலீஸ்காரரின் மணிக்கட்டை நிகாங் அமைப்பை சேர்ந்த நபர் வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோலவே, இந்த கொலையும் நடைபெற்றுள்ளதால், இது நிகாங் அமைப்பினரின் செயலாக இருக்கும் சந்தேகிக்கப்படுகிறது.