சென்னை:  தலைநகர் சென்னையை ‘சிங்கார சென்னையாக’ மாற்ற ‘புளு புராஜெக்ட்…’  என திட்டத்தை அமல்படுத்த  முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே சென்னை சுத்தப்படுத்தும் பணி, எம்எல்ஏக்கள் மற்றும்‘ மாநகராட்சி உதவியுடன் ஜரூராக நடைபெற்று வருவதாக தெரிகிறது. சென்னையின் பழைய பொலிவை மீட்டு எடுக்கும் வகையில், தெரு தெருவாக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, சென்னையை அழகுபடுத்தும் விதமாக, ‘சிங்கார சென்னை’ திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது அதை மேலும் மேருகூட்டி, ‘சிங்காரச் சென்னை 2.0’ ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

உலக அளவில் சென்னை உயர்ந்துவிட்டதாகவும், மெட்ரோ ரயில், விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் உள்ளதாகவும் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் பெருமை பேசுகின்றன. சென்னையில் நவீன கழிப்பிடங்கள் பல கட்டப்பட்டுள்ளன எனவும், நிழற்குடைகள் நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆனால்,  அனைத்து நவீன வசதிகளும் உள்ளது, ஆனால் சாமானிய மக்கள் சிறுகழிக்கக் கூட செல்ல முடியாத சூழலே நிலவி வருகிறது.

மாநகராட்சி தரவுகளின் அடிப்படையில்,  சென்னையில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் 9,200 இருக்கைகள் கொண்ட நவீன கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறத- அத்துடன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டிற்குள் புதிதாக 479 கழிவறைகள் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவைகள் எங்கே உள்ளது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.  இருக்கும் சில கழிப்பிடங்களோ, ஆட்சியாளர்களின் அடியாட்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருகிறது.  சென்னையில் பல கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால் அவை நவீனமாக அல்ல சுகாதாரமாக உள்ளதா?  என்பதும் மில்லியன் டாலர் கேள்விகளே…

கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு தலைநகர் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவதாக திமுக தலைமையிலான அரசுஅறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டது. அவை முற்று பெறுவதற்குள், ஆட்சி மாறியதால், அவை கிடப்பில் போடப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிள்ள ஸ்டாலின், சென்னையை மீண்டும் சிங்காரச் சென்னையாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். ‘சிங்காரச்சென்னை 2.0’ என்ற பெயரிடப்பட்டுள்ள நிலையில், தலைநகரை   புதுப்பொலிவாக மாற்றும் வகையில் 10 அதிரடி திட்டங்களை ‘[புளு புராஜெக்ட்’ என்ற திட்டம் கொண்டு வரும் முடிவில் தமிழ்நாடு அரசு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாகவும், சென்னை சாலைகளை சுத்தமாக்குவதோடு, அதை உலக தரத்திற்கு மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான திட்டத்திற்கு பெயரை ‘புளு புராஜெக்ட் ‘ என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி,‘

சென்னை முழுவதும் சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, கூவம், பங்கிங்காம் கால்வாயும் சுத்தப்படுத்தப்படும்.

அனைத்து கடலோர பகுதிகளையும் அழகுபடுத்தப்படும்.

கடற்கரைகளில் , நீர் விளையாட்டு அமைப்புகள், கடல் கண்காட்சியாக, சுற்றுலா தளங்கள் அமைக்கப்படும்.

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை, மேலும் புதுப்பித்து உலகத்தரக்கு ஈடாக மாற்றப்படும்  திட்டம் உள்ளது.

சென்னையின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் வகையில், மியூசியங்கள், பழங்கால கட்டிடங்கள், வள்ளுவர்கோட்டம் போன்றவை மீண்டும் பொலிவுட்டப்படும்.

சென்னையின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருப்பது போல வண்ண விளக்குகள் அமைக்கும் திட்டம் உள்ளது.

 சென்னையின் உள்ள அனைத்து பாலங்கள், சப் வே அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட உள்ளன. 

கிண்டி, எக்மோரில் பேருந்து நிலையங்களை புதுப்பிக்கப்பட உள்ளது.

மேலும் அண்ணா நகர் டவர் பார்க்கில் புதிய வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்கங்கள்.

சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு காம்ப்ளக்ஸ்,பார்க் அனைத்து விதமான விளையாட்டு மீதும் கவனம் செலுத்தப்படும்.

 குழந்தைகள் வரும் வகையில் அறிவியல் மற்றும் கணித பூங்காக்களும் அமைக்கும் திட்டம்.

வரும் காலங்களில், மின்சார வாகனங்களின் உபயோகம் அதிகரிக்கும் என்பதால், அதற்கான வசதிகள் உருவாக்குதல்,

உள்பட பல்வேறு வசதிகளை மேம்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்காக தமிழகஅரசு, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய,  உத்தரவிட்டு உள்ளதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மெரினா கடற்கரை, திருவொற்றியூர் முதல் உத்தண்டி வரையிலும், , நீருக்கு அடியில் மீன் அருங்காட்சியகம், பூங்காக்கள் சீரமைப்பது, அறிவியல், கணிதம், பொறியியல், செல்ல பிராணி பூங்காக்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதற்கான செலவினங்கள், நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை  குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து விரிவான  விரிவான திட்ட அறிக்கை, முதல்வருக்கு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு மற்றும் அஅதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.