பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பிரதமர் பதவிக்கு என்று ஒரு கெளரவம் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மன்மோகன் சிங் தனது உடல்நிலை காரணமாக நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னை மௌன மோகன் என்று அப்போது விமார்சித்தவர்கள் இப்போது எனது செயல்திட்டங்களை பாராட்டுகின்றனர்.

போலி வாக்குறுதிகள் மற்றும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. கடந்த 7.5 ஆண்டுகளாக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட தொடர் தோல்விகளை ஏற்க மறுக்கும் பா.ஜ.க. அரசு அதை மூடி மறைக்க நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மீது பழிசுமத்துகிறது.

மேலும், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் கானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க பாதுகாப்பு குறைபாடு என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறிவருகிறது.

பிரதமர் பதவிக்கு என்று ஒரு கெளரவம் இருக்கிறது, வரலாற்றைக் குறை கூறுவது தற்போதைய அரசாங்கத்தின் குற்றங்களைக் குறைக்காது” என்று கூறியிருக்கிறார்.