டில்லி,
500ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற  பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு தெரிவித்துஉள்ளார்.
நேற்று மாலை,  பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.
பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்று உள்ளார்.
praab
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக பிரதமர் நேற்று என்னை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பிரதமரின் இந்த தைரியமான நடவடிக்கையின் காரணமாக கணக்கில் வராத கருப்பு பணம் வெளியே வரும்.
இதனை வரவேற்கிறோம்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து உள்ளதால், பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.
அரசு அறிவித்தபடி வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மற்ற ரூபாய் நோட்டுகள் செல்லும்’ 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.