பிரதமருக்கு எதிராக மதுரையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ கைது

Must read

மதுரை:

ன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வைகோ உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மோடியின் மதுரை வருகையை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டன. பல இடங்களில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரளான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை பாண்டிபஜார் முன்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

More articles

Latest article