டெல்லி: ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.

3நாள் பயணமாக தனது தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராகுல் காந்தி,  கம்யூனிஸ்டு கட்சியினரால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தப் பட்ட தனது அலுவலகத்தை பார்வையிட்டார்.  தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, “நாட்டில் எல்லா இடங்களிலும், வன்முறை பிரச்சினைகளை தீர்க்கும் என்ற எண்ணத்தை நீங்கள் காண்கிறீர்கள். மேலும், வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது.. அது நல்லதல்ல.. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார்கள். ஆனால், எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, அங்கு தன்னை காணவந்து காத்திருந்த மூதாட்டியை சந்தித்து பேசினார். ராகுலைக் கண்டதும் அந்த மூதாட்டி அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார். மேலும் அந்த மூதாட்டி ராகுல் காந்தியின் கன்னங்களை அன்புடன் தடவிக் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், ராகுல் தனது அலுவலகம் தாக்கப்பட்டது தொர்பான கருத்து, பாஜகவினரால் திரிக்கப்பட்டு உதயப்பூர் கன்னையாலால் படுகொலை சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக,அகிலஇந்தியகாங்கிரஸ்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர்ஜெய்ராம்ரமேஷ், பாஜக தேசிய தலைவர்ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ராகுல்காந்தி குறித்து  தவறாக வீடியோ  பரப்பியதை கண்டித்துடன், அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.