சென்னை

திமுகவில் ஓ பி எஸ், டிடிவி தினகரன் போன்றோரை இணைக்க பாஜக எங்களை வற்புறுத்தாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  செய்தியாளர்கள் அவரிடம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் இணைப்பு குறித்துக் கேட்டனர். ஜெயகுமார் அளித்த பதிலில், “காய்ந்து போன கொல்லையில் கழுதை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன?   டிடி வி -. ஓபிஎஸ் சந்திப்பு என்பது, நீண்ட நாட்களாக சந்தித்துக் கொள்ளாத கவுண்டமணியும் செந்திலும் சந்தித்தால் எப்படி இருக்குமோ? அதுபோலத்தான் நகைச்சுவையோடு, கோமாளித்தனமான ஒரு சந்திப்பாக இருந்தது.

தனது ஆரம்ப காலகட்டத்தில், ஓபிஎஸ் தர்மயுத்தம் சசிகலா குடும்பத்துக்கு எதிராகத்தான் தொடங்கினார். அப்போது அவர் அந்த குடும்பத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களை முன்வைத்தார்,  அவர்களை, மாஃபியா கும்பல் தமிழ்நாட்டைச் சூறையாடிய கும்பல் தமிழ்நாட்டை கூறு போட்டு விற்ற குடும்பம் சசிகலா குடும்பம் ர். டிடிவியைப் போல ஒரு குற்றவாளி உலகத்திலேயே இருக்கமுடியாது என்றெல்லாம் கூறினார்.

ஓபிஎஸ் போல ஒரு அரசியல் வியாபாரியை உலகிலேயே பார்க்கமுடியாது என்ற தினகரன். அதோடு மட்டுமின்றி,அவரை ஒரு அரசியல் துரோகி என்று கூறியிருந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை ஓபிஎஸ்ஸுக்கு சம்மன் அனுப்பியது. அப்போதெல்லாம் செல்லாமல் இருந்துவிட்டு, இறுதியாக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமே இல்லை. சசிகலா மீது ஒரு தனிப்பட்ட மரியாதை என்றைக்குமே உண்டு என்று அந்த ர்பல்டி அடித்தவர் ஓபிஎஸ்.  அதிமுகவுக்கு ஓபிஎஸ் – டிடிவி சந்திப்பால் எந்தவிதமான தாக்கமும், ஏற்படப்போவது கிடையாது. நாங்கள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவைக் கட்சியில் ஒருபோதும் சேர்க்கப்போவதும் இல்லை. பாஜகவும் எங்களை வற்புறுத்தாது” என்று கூறினார்.