சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதால், பாஜக ஆதரவு சமூக ஊடவியலாளர் கிஷோர் கே சாமி தமிழக காவல்தறையினரால் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள நிலையில், தற்போது புதிய பதிவுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினரை மாநில அரசு காவல்துறையை கொண்டு ஒடுக்கி வருகிறது. ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்தால் பினையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில், சவுக்கு சங்கரும் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில்,  சென்னை  மழை வெள்ளம் குறித்து திமுக அரசை விமர்சித்ததற்காக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு உள்ளார்.

கிஷோர் கே சாமி நவம்பர் 1ஆம் தேதி இரவு பதிவிட்டுள்ள டிவிட் பதிவில், சென்னையின் மழை வெள்ளம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி,  நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கிஷோர் கே சாமி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து,   கிஷோர் கே சாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதி எஸ் அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,  விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி, அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகிவிடும் எனக் கூறி அவரது  முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இதையடுத்து,  இன்று அதிகாலை கிஷோர் கே சாமி பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.