சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் வடகிழக்கு தமிழக பகுதியில் இருப்பதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைபெய்யும் என்று தெரிவித்துள்ள வெதர்மேன்,  “இதுஉன் பொறுமையைச் சோதிக்கும்  இப்படி ஒரு சூழ்நிலை உருவாகலாம் என்று ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் தூரத்தில் உள்ளது மற்றும் இன்றிரவு சென்னை என்டிஎன் கடற்கரைக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் கொட்டும் மழையின் ஒரு பகுதி KTCC யில் நிலத்தில் விழும் பொறுமை காக்கவும் என தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு பகுதி, தற்போது வடகிழக்கு தமிழகத்தில் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து சென்னை மற்றும் ஆந்திர எல்லை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள தமிர்நாடு வெதர்மேன்,  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. 21, 22 ஆம் தேதிகளில் இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்யும். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு பகுதி, தற்போது வடகிழக்கு தமிழகத்தில் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து சென்னை மற்றும் ஆந்திர எல்லை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் இந்த நகர்வு என்பது நீண்ட நேரம் எடுக்கும்.

இது உங்கள் பொறுமையை சோதிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்த மெதுவான நகர்வு காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வெதெர்மன் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இது ஆந்திர எல்லையை நோக்கி நகரும் என்று வெதெர்மேன் தெரிவித்துள்ளார்.