டில்லி

ரியானாவில் நடக்கும் கலவரங்களுக்காக அரியானா முதல்வர் மாற்றப்பட மாட்டார் என பா ஜ க வின் அரியானா மாநில பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

சாமியார் ராம்ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபின் சாமியாருக்கு ஆதரவாக அரியானா மாநிலத்தில் கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.   பல இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.   பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதி மன்றங்கள் கலவரத்தை அடக்க முடியாத முதல்வர் என அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் மீது குற்றம் சாட்டின.

நாட்டு மக்கள் அனைவரும் பா ஜ க மேலிடம் அரியானா முதல்வரை மாற்றும் என எண்ணியிருந்தனர்.   ஆனால் அரியான மாநில பா ஜ க பொறுப்பாளர் அனில் ஜெயின்,  அப்படி ஒரு எண்ணமே இல்லை என கூறியுள்ளார்.   முன்னதாக அனில் பா ஜ க தலைவர் அமித் ஷாவுடன் இது குறித்து பேசினார்.   பேச்சுவார்த்தைக்கு பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

சந்திப்பில் இது பற்றி கேட்டபோது,  “முதல்வர் மனோகர்லால் கத்தார் பற்றி நீதிமன்றங்கள் சொன்ன கருத்தைப் பற்றி எங்கள் கட்சித் தலைமை கவலைப்படவில்லை.   அவர் இந்த நேரத்தில் என்ன செய்ய முடியுமோ, அதை செய்துள்ளார்.   எனவே அவரை மாற்றும் எண்ணத்திற்கே இடமில்லை.   அவரே முதல்வராக தொடர்வார்” என அனில் ஜெயின் கூறினார்.