சென்னை

பாஜக தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகக் கூறப்படுகிறது.  அவர் அன்றைய தினம் சென்னையில் 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜனதா சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தமிழக பாஜக வெளியிட்டுள்ளது.

பட்டியலில்,,

”பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, கிஷண் ரெட்டி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய மகளிர் ஆணையத் தலைவி குஷ்பு ”

உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.