போராட்டத்தில் இருந்து விலகிய ஹிப்ஹாப் ஆதிக்கு பாஜக ராஜா பாராட்டு!

Must read

போராட்டத்தில் இருந்து விலகிய ஹிப்ஹாப் ஆதிக்கு பாஜக ராஜா பாராட்டு!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவு அளித்துவருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் முதன் முதலில் பங்கேற்றவர்களில் ஹிப் ஹாப் ஆதியும் ஒருவர்.

ஆனால் அவர் திடீரென்று இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்தார்.

இதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வரவேற்றுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஹிப் ஹாப் ஆதி வெளியேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பாவி இளைஞர்கள் இப் போராட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article