‘விலங்கு பெண்மணி’ ராதா ராஜன், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்!

Must read

சென்னை:

ல்லிக்கட்டு குறித்த போராட்டத்தை இழிவாக பேசியதாக பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் மீது தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

தமிழர்களை பற்றி அவதூறாக பேசிதற்காக பகிரங்கமாக மறுப்பு கோருவதாக கூறியுள்ளார்.

இன்று தேமுதிகவை சேர்ந்தவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவரது வீட்டை இளைஞர்களும் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி வந்தனர்.

இதன் காரணமாக தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக ராதா ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் துவங்கும் முன்பே சர்வதேச செய்தி நிறுவனம் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதில் நான் தெரிவித்த பதிலை பொது மக்கள் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டுள்ளனர்.

நான் தெரிவித்த கருத்து பொது மக்களை காயப்படுத்தியுள்ளது என்பதையறிந்து வருத்தம் கொள்கிறேன்,

இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதோடு எனது கருத்து யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் நான் தெரிவிக்கவில்லை,

நான் அளித்த பதில் ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் சார்ந்த கருத்தே ஆகும்.

இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article