என் தாத்தன்களாக மீண்டும் பிறந்திருக்கிற இளைஞர்கள்! இயக்குநர் சீனு ராமசாமி பேட்டி

Must read

“ஒரு தலைமுறைய நாம சரியா புரிஞ்சுக்காம போயிட்டோமே என  முந்தைய தலைமுறையினர வெட்கப்பட வைத்துஜெயித்துக்காட்டி கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்” –

ஜல்லிக்கட்டுக்காக துவங்கி இன்று பல்வேறு நல கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் குறித்து சிலிர்த்துப்போய்ச் சொல்கிறார்தமிழர் பிரச்சனைகளை தன் படைப்புகளின் மூலம் பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி

தன் உணர்வுகளை நம்மிடம் கொட்டிவிடத்துடித்துக்கொண்டி ருந்த அவரிடம் எந்த கேள்வியும் நாம் எழுப்பாமலிருக்க…  ஆவேச அருவியாய் கொட்டினார் சீனு.

“சமூக ஊடகங்களில், “இளைஞர்கள் பொறுப்பு இல்லாம இருக்காங்க , எந்த அரசியல் பார்வையும் இல்லை”ன்னு சொன்னஎல்லா குற்றச்சாட்டுகளையும் உடைச்சு  நொறுக்கிட்டு , சமூக ஊடகத்தையே தனக்கான களமாக, கருவியாக மாற்றி நாங்க  இறங்காதவரைக்கும் தான் உங்களுக்கெல்லாம் நல்லதுன்னு ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்!” என்கிறார் சீனு. அவரது குரலில்..”என்றவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சற்று சில விநாடிகள் பேச்சடைத்தவர் மீண்டும் பேசுகிறார்:

“எந்த வித பாலின பேதமின்றி ,சகோதரர்களாக  தோழர்களாக எந்த  இந்த நாட்டை மீள் உருவாக்கம் செய்துவருகிறார்கள்.இந்த தலைமுறையினர்.  ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து இயற்கை சுரண்டல்கள் மீது  திரும்பி இருக்கிறார்கள். இவர்களைபார்த்து எப்படி சொல்லமுடியும் அரசியல் தெரியாதவர்கள் என்று?

.எங்களோட சிறுவயதுல இலங்கை  தமிழர்கள் பிரச்சனைக்காக போராட்டங்களில் ஜெயவர்தனே கொடும்பாவிஎரித்தோம்.இன்னைக்கு பள்ளிக்கூட  மாணவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்காக பாதாகைகள தாங்கி பிடிச்சு நிற்கும்போதுரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இந்த போராட்டம் மூலம் இன்னும் தமிழன் நெருப்பு குறையாமல் இருக்கிறான்என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

உலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இந்த போராட்டம். இருநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு  கூடிய கட்சிக்கூட்டம்இல்லை இது. உணர்வுக்காக உரிமைக்காக கூடிய இந்த கூட்டம் எங்களுக்கு பின்னே பிறந்து எங்களை முன்னேவழிநடத்திக்கொண்டிருக்கிறது

தன்னோட உரிமைக்காக வீதிக்கு வந்து நிற்கிறார்கள் இந்த இளைஞர்கள்.  ஒரு வாட்சப்ல ஒரு செய்தி இப்படித்தான்வந்தது, உங்கள் மீது தடியடி நடத்தினால் தேசிய கீதம் பாடுங்க என்று. ஒரு நிமிஷம் நான் கற்பனை பண்ணி பார்த்தேன்,இந்த போராட்ட உத்திகள் , நெல்சன் மண்டேலா காந்தி எல்லாம் இருந்தாலே பார்த்து வியக்குற அளவிலான போராட்டம்.

ஒரு வீரவிளையாட்டை அனுமதிக்க கோரி அமைதியாக போராடும் இந்த பிள்ளைகளிடம் இருந்து தான் நான் அறத்தையும்வீரத்தையும் கற்க வேண்டும். தமிழ்நாடு மீட்டுருவாக்கம் பெறுகிறது. .

நாம் இழந்த நம் மரபுகளையும் ,கலாச்சாரத்தையும் இந்த இளைஞர் சமுதாயம் கட்டிக்காக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு பிறந்திருக்கிறது, தலைவனற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ் தான் தலைவன்..

அந்நிய முத்லீடுகளுக்கெதிரான போராட்டம். காவிரிக்கான குரல், என எல்லா மட்டங்களிலும் அரசியல் பேசுகிறார்கள். தொலைத்த நம் மரபை  என் தாத்தன் எனக்கு சொன்னது.

என் தாத்தன்களாக மீண்டும்  பிறந்திருக்கிற  இந்த பிள்ளைகளுக்காகவே  ஒரு கவிதையும் வடித்திருக்கிறேன்!”  என்றவர் அந்த கவிதையைச் சொல்கிறார் உணர்வுகள் மேலிட..

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article