டில்லி:

ர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடியூரப்பா உள்பட 72 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்பட  72 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சரும், மூத்த பாஜக நிர்வாகியுமான ஜே.பி.நட்டா வெளியிட்டள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 28ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே மாதம்  12ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவோர் ஏப்ரல் 17ந்தேதி முதல்  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வேளையில்  அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாரதியஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்பட  72 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சரும், மூத்த பாஜக நிர்வாகியுமான ஜே.பி.நட்டா வெளியிட்டள்ளார்.  பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஒப்புதலுடன் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் கர்நாடக மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா, சிகரிப்பூரா சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அதுபோல முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செட்டர் ஹுப்ளி தர்வாத் மத்திய தொகுதியிலும்,  கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிமோகோ தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மேலும், பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.