பாஜக எம் எல் ஏ மகள் சாக்‌ஷி கணவருடன் துப்பாக்கி முனையில் கடத்தல்

Must read

லகாபாத்

திருமணம் பதிவு செய்ய சென்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மகள் சாக்‌ஷி அவர் கணவருடன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா தனது காதலரான அஜிதேஷ் குமார் என்பவரை மணம் புரிந்தார்.  பிராமண வகுப்பை சேர்ந்த இவர் தலித் வாலிபரை மணந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   அதை ஒட்டி தலைமறைவாக இருந்த சாக்‌ஷியும் அவர் கணவரும் வீடியோக்களை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் தமக்கு கொலை மிரட்டல் உள்ளதாக சாக்‌ஷியும் அஜிதேஷும் தெரிவித்தனர்.  இந்நிலையில் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.   இதற்காக இன்று காலை இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்தனர்.   .

இன்று காலை சுமார் 8.30 மணிக்கு நீதிமன்ற வாசலில் இருவரும் நீதிபதி வருகைக்காக காத்திருந்த போது ஒரு கருப்பு சுமோ வாகனம் வந்துள்ளது.  அதில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் இருவரையும் அந்த வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.   அந்த வாகனத்தில் உ பி 80 என்னும் பதிவு எண் உள்ளதால் அது ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது.

More articles

Latest article