தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்..!

Must read

ஸ்ரீநகர்:

ற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.  பிரிவினைவாதிகளால்  தியாகிகள் தினம் அணுசரிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக 2 நாட்கள் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும்  அமர்நாத் யாத்திரதொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு அமர்நாத்  புனித யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி தேதி பகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து  தொடங்கியது. இடையிடையே மழை காரணமாக யாத்திரை தடைபட்ட நிலையிலும் தொடர்ந்து பனி லிங்கத்தை யாத்ரீகர்கள் தரிசித்து வந்த வண்ணம் உள்ளனர்.

இடையில்,  ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி புர்ஹான் வானியின் மூன்றாவது நினைவு நாளை, பயங்கரவாதிகள் தியாகிகள் தினமான அறிவித்து கொண்டாடி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த சனிக்கிழமையன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதால்,  அன்றைய தினம் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு இருக்கலாம் என கருதி,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுவரை 12 குழுக்கள் அமர்நாத் குகைக்கு சென்று பனி லிங்கத்தை தரிசித்து வந்துள்ள நிலையில், இன்று 13வது குழு பகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து புறப்பப்படடது. இந்த குழுவில் 7,993 யாத்ரீகர்கள் இருப்பதாகவும், இதுவே, இதுவரை சென்றுள்ள யாத்ரீகர்கள் குழுவில் பெரிய குழு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாத்திரை, ஜம்முவில் இருந்து மீண்டும் தொடங்கி யுள்ளது.

முகாமில் இருந்து 310 வாகனங்கள் மூலம்   இரண்டு பிரிவாக  யாத்ரீகர்கள் இன்று அதிகாலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் புறப்பட்டனர், இன்று மாலை அவர்கள் பள்ளத்தாக்கில் உள்ள இடங்களை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுவார்கள்.

46 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை  1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article