சென்னை:
திமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என பேசியிருந்தார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் கூறியதாவது: பாஜக கட்சி என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை. கவுன்சிலராகக்குட அண்ணாமலை இருந்ததில்லை. ஜெயலலிதாவை பற்றி பேச இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கிதையும் இல்லை. இவ்வாறு கூறினார்.