பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லி கோவிந்தபுரி பகுதியில் திருடுபோனதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் காரை வாகனத்தின் ஓட்டுநர் ஜோகிந்தர் ஓட்டிச் சென்று தனது வீட்டில் உணவுக்காக நிறுத்தியிருந்தார்.
அப்போது பிற்பகல் 3 மணியளவில் இந்த வாகனம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, மார்ச் 19ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் இந்த வாகனம் குருகிராம் நோக்கி சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
இருந்தபோதும் இதுவரை கார் எங்குள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததை அடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.