க்னோ

க்னோவை சேர்ந்த ஒரு பாஜக தலைவர் கட்சியின் தலைமையை குஜராத்தி குண்டர்கள் என கூறியதற்காக நீக்கப்பட்டுள்ளார்.

லக்னோவை சேர்ந்த ஐ பி சிங் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆவார். கடந்த சில மாதங்களாக அவர் பாஜக தலைமை மீது அதிருப்தியுடன் உள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு தனது இல்லத்தை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் அகிலேஷ் யாதவை மிகவும் புகழ்ந்துள்ளார்.

இது பாஜகவினருக்கு கடும் எரிச்சலை உண்டாக்கி உள்ளது. சிங் தனது டிவிட்டரில் தனது பெயரை உசுல்தார் (கொள்கைக்காரர்) என மாற்றிக் கொண்டுள்ளார். பாஜகவினர் தங்கள் பெயரை காவல்காரர் என மாற்றிக் கொண்டுள்ள வேளையில் இவர் தனது பெயருடன் கொள்கைக்காரர் என மாற்றிக் கொண்டுள்ள்து பாஜகவினரின் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது.

இந்நிலையில் சிங் தனது டிவிட்டரில், “நான் கொள்கைப் பிடிப்புள்ள சத்திரியர் பரம்பரையை சேர்ந்தவன். கடந்த ஐந்து வருடங்களாக நாட்டின் இந்தி பேசும் பகுதிகளை பிடித்துக் கொண்டு இரண்டு குஜராத்தி குண்டர்கள் நம்மை ஏமாற்றி முட்டாளாக்குகின்றனர். நாம் அமைதியாக இருக்கிறோம்.

நமது உத்திரப் பிரதேச மாநிலம் குஜராத்தை போல் ஆறு மடங்கு பெரியது. நமது பொருளாதார மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. ஆனால் குஜராத் மாநில பொருளாதார மதிபு ரூ.1,15,000 கோடி. நாம் உற்பத்தை செய்வதை அவர்கள் தின்று தீர்க்கின்றனர்”. என பதிந்துள்ளார்.

மற்றும் உள்ள தனது பதிவுகளில், “நாம் பிரதம மந்திரியை தேர்வு செய்தோம். ஆனால் அவர் தேநீர் கோப்பை மற்றும் டி சர்ட்டுகள் விற்க பிரசார மந்திரியாக மாறி உள்ளார். பாஜக போன்ற ஒரு மாபெரும் கட்சியை டிசர்ட் விற்கும் கட்சி எனவும் மிஸ்ட்கால்கட்சி எனவும் அவர் மாற்றி உள்ளார்.

உத்திரப்பிரதேச மாநில கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் அகிலேஷ் யாதவ் பூர்வாஞ்சல் பகுதியில் போட்டியிட உள்ளதை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் சாதி மற்றும் மத அரசியல் ஒரு முடிவுக்கு வர உள்ளது.” என பதிந்துள்ளார்.

இதை ஒட்டி பாஜக மாநில தலைமையின் சிபாரிசின் பேரில் அகில இந்திய பாஜக தலைமை ஐ பி சிங் கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சிங் தனது டிவிட்டரில், “நான் ஊடகங்கள் மூலம் கட்சியில் இருந்து ஆறு வருடங்கள் விலக்கப்பட்டதாக அறிந்துக் கொண்டேன். நான் முப்பது வருடங்கள் இந்த கட்சிக்காக உழைத்துள்ளேன்.

ஆனால் கட்சியை குறித்த உணமையை பேசுவது குற்றம் என்பதன் மூலம் உள்கட்சி ஜனநாயகத்தை பாஜக இழந்துள்ளது.

நரேந்திர மோடி ஜி, என்னை மன்னியுங்கள். என்னால் கண்களைக் கட்டிக் கொண்டு உங்களுக்கு காவல்காரராக பணி புரிய முடியாது. “ என பதிந்துள்ளார்.