பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாவதாக பாஜக போலியாக வதந்தி பரப்புகிறது என பீகார் துணைமுதல்வர் தேஜ;ஸ்வியாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவன பணிகளில் வடமாநித்தவர்களே பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல வன்முறை, திருட்டு போட்ட முறைகேடுகளும் அதிகரித்து வருகிற்து. இதையடுத்து, மாநிலத்தில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழனின் பணியை ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில கல்லூரிகளில், வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது சிறுசிறு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபுவும் விளக்கம் அளித்தார். மேலும் வதந்திகள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், வடமாநிலத்தவர்கள், குறிப்பாக பீகாரிகள் தாக்கப்படுவதாக வதந்திகளும், வீடியோக்களும் வெளியாகின. இது வடமாநிலத்தவர்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவங்கள் பீகார் சட்டபேரவையிலும் எதிரொலித்தது. இதையடுத்து முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வியாதவ், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் போலியானது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இல்லைஎ ன காட்டவே இது செய்யப்படுகிறது. இதுபோன்ற போலியான வதசந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.