கொல்கத்தா

பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காக ஆன்மீகத்தை கலப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் பாஜக வுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.    மக்களவை தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிய இந்த சர்ச்சைகள் தற்போது கடும் உச்சத்தை எட்டி உள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் பாஜகவினர் தொடர்ந்து மம்தா பானர்ஜியை பெரிதும் எரிச்சலூட்டி வருகின்றனர்.   அவர் செல்லும் இடங்களில் எல்லாம்  பாஜக தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியதால் அவர் இரு முறை எரிச்சல் அடைந்துள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி, “ஜெய் ஸ்ரீராம், ராமருக்கு ஜெய், ராம் நாம் சத்யஹை போன்ற கோஷங்கள் ஆன்மீகத்திலும் சமூகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றதாகும்.   நாங்களும் அந்த உணர்வுகளை மதிக்கிறோம்.  ஆனால் ஆன்மிக கோஷமான ஜெய் ஸ்ரீராம் என்பதை பாஜக தனது ஆதாயத்துக்காக அரசியலுடன் கலந்துள்ளது.” என பதிந்துள்ளார்.