க்னோ

பாஜக அனைவரிடமும் அன்பு செலுத்தாமல் மத அரையல் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெRஅ உள்ளது.  இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   காங்கிரஸ்  சார்பில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

ராகுல் சமீபத்தில் தாம் இந்து என்றும் ஆனால் இந்துத்வாவாதி இல்லை எனவும் தெரிவித்தார்.  ராகுலின் இந்த பேச்சுக்கு நாடெங்கும் வரவேற்பு எழுந்துள்ளது.  இன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்  அப்போது செய்தியாளர்கள் ராகுலின் இந்துத்துவா கருத்து குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

பிரியங்கா தனது பதிலில், “அரசில் இருப்போர் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் நேர்மையாக நடக்க வேண்டும் என இந்து மதம் சொல்கிறது.  ஆனால் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அதற்குப் பதிலாக மத அரசியல் செய்து வருகின்றனர்.   அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது.  இதைத்தான் ராகுல் காந்தி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.