நாட்டின் பொருளாதாரத்தை பாஜகஅரசு அழித்துவிட்டது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Must read

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது,

முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வலுப்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். பாஜகவும், பிரதமர் மோடியும் இரண்டு இந்துஸ்தானங்களை உருவாக்க விரும்புவதாகவும், ஒன்று பணக்காரர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு-மூன்று தொழிலதிபர்களுக்கும் மற்றொன்று தலித்துகள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

எங்களுக்கு இரண்டு இந்தியா வேண்டாம். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது. இதுதான் இப்போது நாட்டில் நடக்கும் சண்டை.

இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article