பெங்களூரு:

ர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக  72 வேட்பாளர்கள்அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லை என்று, மாநில பாஜக தலைவரான எடியூரப்பாவுக்கு எதிராக அக்கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது பாஜக மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது மகளுக்கு சீட் கேட்டிருந்த நிலையில், அது ஒதுக்கப்படாத நிலையில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட பலர், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி   எடியூரப்பாவை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள‌ சிக்பேட்டை தொகுதிக்கு உதய் கருடாச்சாரின் பெயர் அறிவிக்கப்பட்டதால், விருப்ப மனு அளித்த மற்றொரு பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர் கள்  மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் அனந்தகுமார்  ஆகியோரை  கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல, பெலகாவியில் சீட் கிடைக்காததால் ஜெகதீஷ் சி மேட்குட் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

சித்ரதுர்காவில் தற்போதைய பாஜக எம்எல்ஏ திப்பசுவாமிக்கு சீட் வழங்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாநில பாஜகவில் உள்கட்சி மோதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து விடுவோம்  என கனவு கொண்டிருக்கும் பாஜக மேலிடம், தற்போது நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்சினை காரணமாக  அதிர்ச்சிகுள்ளதாகி இருப்பதாக  கூறப்படுகிறது.