றவைக்காய்ச்சல் பீதியால் இந்தியாவில் இருந்து கோவி இறக்குமதி செய்ய சவூதி அரசு தடைவிதித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.   இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது குறித்து  அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

இந்த அறிவிப்பை சவுதி அரேபிய கால்நடை இடர் மதிப்பீட்டுத்துறை அமைச்சக இயக்குனர் சனாத் அல்–ஹார்பி வெளியிட்டு இருக்கிறார்.

சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால், இதர நாடுகளும் தடை விதிக்கக்கூடும் என்ற அச்சம் கோழி ஏற்றுமதி யாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.