மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

“லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை தேறும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கேட்ஸ்.

மேலும், “நல்வாய்ப்பாக நான் இரண்டு தவனை தடுப்பூசியுடன் பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்டேன். எனக்கு கொரோனா வந்திருக்கும் இந்த சமயத்தில் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ வசதி இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மிலின்டா கேட்சை விவாகரத்து செய்த பிறகு கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டம் இரண்டு ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இன்று நடைபெறும் நிலையில் பில் கேட்ஸ் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இருப்பினும் இணையவழியாக அதில் பங்கேற்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

“விவாகரத்துக்குப் பின் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா ?” என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று 66 வயதாகும் பில் கேட்ஸிடம் கேள்வியெழுப்பியது “அப்படி திருமணம் செய்து கொண்டால் யாரை திருமணம் செய்ய ஆசைபடுவீர்கள்” என்றும் கேட்டது.

இதற்கு பதிலளித்த பில் கேட்ஸ் “தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையென்றும். வாய்ப்பிருந்தால் மீண்டும் மெலின்டாவுடன் வாழவிரும்புவதாகவும்” தெரிவித்திருந்தது குறிப்படத்தக்கது.

இந்த நிலையில் அறக்கட்டளையின் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பில் கேட்ஸ்.