பீகார் : தலித் ஐ ஏ எஸ் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை

Must read

 

பாட்னா

லித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஐ ஏ எஸ் மாணவர்களுக்கு பீகார் அரசு ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை வழங்க உள்ளது.

ஐ ஏ எஸ் எனப்படும் இந்திய ஆட்சியாளர் தேர்வு எழுத விரும்புவோர் முதலில் மாநில அரசின் முதல் கட்டத் தேர்வில் தேற வேண்டும்.  அதன் பிறகு மத்திய அரசு நடத்தும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.   அதன் பிறகு ஐ ஏ எஸ் தேர்வுகளை எழுத வேண்டும்.

ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற பொருட்செலவு அதிகம் ஆகின்றது.   அதனால் முதல் கட்ட தேர்வுக்குப் பின் பலரால்  மேற்கொண்டு தேர்வு எழுத இயலுவதில்லை.   குறிப்பாக தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் பலர் ஐஏஎஸ் கனவுடன் இருந்தாலும் அவர்களால் செலவு செய்து படித்து தேர்வு எழுத முடிவதில்லை.

தற்போது பீகார் அரசு மகாதலித்துகள் என அழைத்து தாழ்த்தப்பட்டோருக்கு வீடுமனைகள் உட்பட பல உதவிகள் புரிந்து வருகின்றன.    அந்த வரிசையில் பீகார் அரசு மற்றொரு திட்டம் அறிவித்துள்ளது.    அதில், “தலித் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சாரில் அரசு ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளது.   தலித் மற்றும் பழங்குடியினரில் ஐஏஎஸ் தேர்வுகளில் பீகார் மாநில முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.50000 மற்றும் மத்திய அரசு முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சமும் வ்ழங்க உள்ளது” என அறிவித்துள்ளது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஆளும்கட்சி தலைவர் ஒருவர், “முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி எதிர்கட்சி கூட்டணியில் இணைந்தது எங்கள் கட்சிக்கு பேரிழப்பாகி உள்ளது.  மேலும் தற்போதைய இடைத்தேர்தல்களில் தலித்துகளின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை.   அதனால் நாங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article