பாட்னா:

ஆயுதங்களோடு வந்த கும்பல் ஒன்று டாக்டரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு, அவரது மனைவியையும், 15 வயது மகளையும் பாலியல் வன்புனர்வு செய்த கொடுமை பீகாரில் நடந்துள்ளது.


பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் தனியாக க்ளினிக் நடத்தி வரும் டாக்டர், பணி முடிந்து தன் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த புதன்கிழமை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சோந்திதா என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது, ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று, டாக்டரை வழிமறித்தது.

டாக்டரை மரம் ஒன்றில் கட்டி வைத்தனர். நகைகளை எல்லாம் தந்து விடுகிறேன். எங்களை விட்டுவிடுங்கள் என்று டாக்டரின் மனைவி கெஞ்சினார்.

வயல்வெளிக்கு அவர்களை இழுத்துச் சென்ற கும்பல், டாக்டர் கண்முன்னே பாலியல் வன்புனர்வு செய்தனர்.
நடந்ததை போலீஸுக்கு சொல்லக் கூடாது என்று அந்த கும்பல் டாக்டரை மிரட்டியது.

எனினும் அவர்கள் விடுவித்ததும் போலீஸாருக்கு தகவலை சொன்னார் டாக்டர்.

விரைந்து சென்ற டாக்டர்கள் பாலியல் வன்புனர்வுக்கு ஆளாக்கப்பட்ட இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20 பேரை பிடித்து விசாரித்து வருகின்றோம்.

அவர்களில் இருவரை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதை வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.

பாலியல் வன்புனர்வில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் பிரேம் சந்திர மிஸ்ரா, இதுபோன்ற சம்பவங்கள் பீகாரை இருளில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளார்.

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, பாஜகவுடன் கைகோர்த்த பிறகு சட்டம் ஒழுங்கை முதல்வர் நிதிஷ்குமார் குழி தோண்டி புதைத்துவிட்டார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.