எழுத்தாளர் சாவியின் பேத்தி ஆர்ஜே வைஷ்ணவிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் , பிக்பாஸ் நிகழ்வுக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நீண்டநாள் காதலரான அஞ்சன் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைஷ்ணவி – அஞ்சன் திருமணம் நடந்துள்ளது. இதை வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்து படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் காதலை நிருபிக்க பிரம்மாண்ட விழா தேவையில்ல . நாங்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் எங்கள் காதலை நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வைஷ்ணவி – அஞ்சன் திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளது.