பீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது:  50 பேர் பலி!!

Must read

பாட்னா:
பீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள்.
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மதுபானி. சித்தாமர்ஹ் தர்பங்கா நோக்கி சென்ற பேருந்து ஒன்று மதுபானி அருகே உள்ள சன்குளி துபி என்ற இடத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது.
bus-2
இந்த தகவலை அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த கிராமத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.  பேருந்தில் பயணித்த 55 பணிகளில் ஐம்பது பேர் வரை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவரை ஒரு பெண் உள்பட நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. . தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
bus-2-1
மக்களே மீட்பு பணியில் இறங்கிய பிறகு, நீண்ட நேரம் கழித்தே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் ஆத்திரமான மக்கள், காவலர்கள் மீது கற்களையும், செருப்புகளை வீசினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article