கோபால்கஞ்ச்

பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள கண்டகி நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்ற வாரம் கோபால் கஞ்ச் பகுதியில் ஒரு பாலம் புதியதாக திறக்கப்பட்டது.

இந்தப் பாலம் ரூ. 263 கோடி செலவில் கட்டப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பாலம் கட்டப்பட்டு வந்தது.

கடந்த வாரம் இதை முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்துள்ளார்.

மழைநீர் வரத்து அதிகரித்த நிலையில் இந்த பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.