குணா, மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட தலித் விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளில் ராம்குமார் அகிர்வார் என்பவரும் ஒருவர் ஆவார்.  தலித் வகுப்பைச் சேர்ந்த  இவர் வெகுநாட்களாக காலியாக இருந்த ஒரு இடத்தில் விவசாயம் செய்துள்ளார்.  அந்த இடத்தில் குணா மாவட்ட நிர்வாகம் ஒரு கல்லூரியை கட்ட முடிவு செய்தது  இதையொட்டி அவரைக் காலி செய்ய வற்புறுத்தி வந்துள்ளன்ர்.
இடத்தை காலி செய்ய சிறிது அவகாசம் கேட்ட ராம்குமார் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள்வில்லை என கூறப்படுகிறது.   நேற்று முன் தினம் அங்கு காவல்துறையினருடன் வந்த மாவட்ட அதிகாரிகள் நிலத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.   சிறிது கால அவகாசம் கோரி கெஞ்சிய ராம்குமாரை அலட்சியம் செய்த காவல்துறையினர் பயிர்களை அழிக்க தொடங்கி உள்ளன்ர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம்குமார் மற்றும் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் கண் மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.  ராம்குமார் மயக்கம் அடைந்துள்ளார்.  இதனால் மனம் உடைந்த விவசாயியின் மனைவி மற்றும் விவசாயி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.   ராம்குமார் தாக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/RahulGandhi/status/1283611129730588672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1283611129730588672%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.kalaignarseithigal.com%2Findia%2F2020%2F07%2F16%2Fmp-police-brutally-assault-dalit-farmer-kids-and-kin-for-resisting-removal-of-encroachment
இதை பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  இதையடுத்து குணா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை சூப்பிரண்ட் ஆகியொரை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்  பணியிடை நீக்கம் செய்துள்ளார்.  மேலும் இது குறித்து ஒரு உயர்மட விசாரணைக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார்.