தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்…!

Must read

கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 தாமதமாகியுள்ளது.

பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது. பிக் பாஸ் 5ம் சீசன் ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது..

இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.தற்போது ஒரு புதிய ப்ரோமோவுடன் ஒளிபரப்பு தேதியை அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது போட்டியாளர்கள் விவரம் உள்ளிட்டவை தொடக்க நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிக்பாஸ் 5-ன் போட்டியாளர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் என்று கூறி ஷகிலாவின் மகள் மிலா, கோபிநாத் ரவி, சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஷம்மு உட்பட 5 பேர் அடங்கிய ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஷகிலாவின் மகள் மிலா, கோபிநாத் சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஆகியோர் இந்த ஃபோட்டோவில் ஒன்றாக இருப்பதால், இதில் காணப்படும் 5 பேரும் பிக்பாஸ் சீசன் 5-ன் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

 

More articles

Latest article