பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை விஜய் டிவியில்ஆரம்பமானது. இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இதுவரை நாம் பார்த்த சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 5 செட் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. பிக் பாஸ் வீடு பச்சை வண்ணம் போர்த்தியது போன்று உள்ளது.

உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் அமர்ந்து பேசுவதற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. இந்த முறை வீட்டிற்கு வெளியில் பல இடங்களில் அமர்ந்து பேசுவதற்கு வெளியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த முறை ஜெயில் இருந்த இடம் சிறிய அறையாக இருக்கிறது. ஒரு வேளை அது புகை பிடிக்கும் இடமாக கூட இருக்கலாம். இந்த முறை வீட்டிற்கு வெளியில் அடியில் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலுக்கு போகிறவர்கள் இந்த முறை ரொம்பவே கஷ்டப்படுவார்கள். ஜெயிலுக்குள் பாத்ரூம் வசதிகள் இல்லை. நீச்சல் குளம் இருந்த இடத்திலேயே தற்போது ஜெயில் இருக்கிறது.

நேராகச் சென்றால் டைனிங் டேபிள் இருக்கின்றது. கிச்சனில் இந்த முறை எந்தவித மாற்றமுமில்லை. வழக்கம்போல் இந்த முறையும் கொஞ்சம் பெரியதாக ஸ்டோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக அகம் டிவி இருக்கும் இடம் வழக்கம் போல் டிவி அதே சோபாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கன்பெக்சன் அறை இந்த முறை அமைதியின் நிறமான வெள்ளை நிறத்தில் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.