சென்னை

மிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.  இதுவரை 11.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 13,728 பேர் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 9.9 லட்சம் பேர் குணம் அடைந்தும் தற்போது சுமார் 1.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், முடி திருத்தகம்,  அழகு நிலையம், உடற்பயிற்சி சாலை, வணிக வளாகங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன.  பல அலுவலகங்கள் மிக குறைந்த ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன.

ஒரு சில மாவட்ட ஆட்சியர்களுக்கு எந்தெந்த கடைகளை மூடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதையொட்டி தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் 3000 சதுர அடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.