இந்த வாரம் வெளியேற்றப்படப்போகிறவர் சக்தி!: பிக்பாஸ் அலப்பறை

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்,  வெளியேற்றப்படப்போகிறவர் சக்திதான் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது.

இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க வேண்டும் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் தெரிவித்திருந்தார். மொத்தம் உள்ள  எட்டு போட்டியாளர்களில் ரைசா மட்டும் சரியான காரணங்களை கூறினார். ஆகவே வெளியேற்றப்படும் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. மற்ற ஏழு  போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 இந்நிலையில் வையாபுரியை ஹவுஸ்மேட்கள் சேர்ந்து காப்பாற்றினார்கள். பிக்பாஸ் கேட்ட ஐந்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்ததன் மூலம் காயத்ரி காப்பாற்றப்பட்டார்.

அதே போல பிந்துமாதவி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர்  காப்பாற்றப்படுவதாக கமல் நேற்று அறிவித்தார்.

இந்த வரிசையில் மிச்சம் இருக்கும் ஆரவ், சினேகன், சக்தி ஆகியோரில் சக்தி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.

 

மற்றவர்களை விட சக்திதான், குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்பது இணையதள வாக்கு சேகரிக்கும் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.


English Summary
big boss: Sakthi remove this week