புரூஸ்லி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

பண்டிட் குயின், எலிசபெத், நியூயார்க், ஐ லவ் யூ உட்பட பல படங்களை இயக்கிய சேகர் கபூர், தற்போது லிட்டில் டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல நடிகராக விளங்கி மர்ம மரணம் அடைந்த புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் இது.

இந்தப் படத்துக்கு நம்ம ஊர் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

“இசைமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன” என்று உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார் சேகர் கபூர்.


English Summary
AR-Rahman-to-compose-music-for-Brucelee-biopic