இந்தியில் பிரபலமன பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார்.
இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் ஒரு பிரமாண்டமான வீட்டில் நடக்கப்போகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிக்பிரதர் என்ற நிகழ்ச்சி.
நெதர்லாந்தைச் சேர்ந்த எண்டமால் என்ற, நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம், பல்வேறு நாடுகளின் டிவி சேனல்களுக்காக ரியாலிட்டி ஷோ உட்பட பல் நிகழ்ச்சிகளை தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் டி மால் என்பவர் உருவாக்கிய ரியாலிட்டி ஷோ தான் ‘பிக் பிரதர்’.
தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள், இதற்கென தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படும் இவர்கள், போட்டியில் தோற்றாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வீட்டில் டி.வி, போன், செல்போன், பேனா பேப்பர்… எதுவும் இருக்காது. அதாவது போட்டியாளர்கள் வெளிஉலகத்துடன் தொடர்புகொள்ளவே முடியாது.
கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஆகவே போட்டியாளர்களின் நடவடிக்கைகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.
இந்த சூழ்நிலையில் அவர்களுக்குள் போட்டிகள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைந்த வாக்கு பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியில் இருந்து வெளியேறுவார்கள். கடைசி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களுக்குள் நடத்தப்படும் போட்டியில் ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு பிரம்மாண் பரிசு வழங்கப்படும்.
இந்த ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சிதான், 2006ம் ஆண்டில் ‘பிக் பாஸ்’ என்ற பெயரில் இந்தி(யாவு)க்கு வந்தது. ‘எண்டமால்’ நிறுவனமே பிக்பாஸையும் தயாரித்து அளித்தது.
அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றம் நடந்தது. அதாவது ஒரிஜினல் பிக் பிரதர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் சாமானியர்கள். பிக்பாஸில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வி.ஐ.பி.க்கள்.
‘பிக்பாஸ்’ இதுவரை இந்தியாவில் 10 சீசன்கள் வெளியாகி உள்ளது. இவற்றை தொகுத்து அளித்தவர்கள் அனைவரும் திரையுலக பிரபலங்கள்தான்.
அதிகபட்சமாக சல்மான்கான் ஆறு சீசன்களையும், அமிதாப், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத், அஷ்ரத் வர்ஷி ஆகியோர் தலா ஒரு சீசனையும் தொகுத்து அளித்தனர்.
இந்த இந்தி பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு சில விதி முறைகள் உண்டு. கலந்து கொள்பவர்கள் தங்களுக்குள் இந்தியில்தான் பேசிக்கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்கக்கூடாது. . அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.
போட்டி விதிகளை மீறினால், உடனடியாக போட்டியாளர் . இதுதான் இந்தி பிக்பாஸ் விதிகள்.
இந்த இந்தி பிக்பாஸில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
முதல் சீசனில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த் செய்த அட்டகாசம், கஜோலின் தங்கை தனிஷாவும் நடிகர் அர்மான் கோஹ்லியும் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானது, ‘அர்மான் கோலி என்னை துடைப்பத்தால் தாக்கினார்’ என்ற நடிகை சோபியா ஹயாத்தின் புகார் செய்ய.. அவர் கைது செய்யப்பட்டது… ‘பிக் பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து சல்மான் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்’ என்று சாமியார் ஓம் பேட்டியளித்தது… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு கொண்டுவர எண்டமால் நிறுவனம் திட்டமிட்டு வந்தது.
தற்போது அந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி முன்வந்துள்ளது. தொகுத்தளிக்க கமல் ஒப்புக்கொண்டார்.
போட்டியாளர்கள் பற்றி தற்போது தகவல் ஏதும் இல்லை வரும் ஜூலை முதல்வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.
நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் பங்குபெறுவார்கள். எல்லோரும் சினிமா பிரபலங்கள்தான். இவர்களு மேக்கப் முகத்துடன் திரையில் வந்த இவர்கள், மேக் அப் இன்றி இயல்பான முகத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள்.
வெளி உலக தொடர்பே இன்றி தங்களது பிரச்சினைகளை எப்படி தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்கள் கண்டுகளிக்கப்போகிறார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன், போட்டியாளர்களுக்கு இரு வாரங்கள் பயிற்சி வகுப்பும் உண்டாம்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்தளிக்க வேண்டும் என்று கமலிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டாரம். தான் ரசிக்கும் டிவி நிகழ்ச்சிகளில் பிக்பாஸும் ஒன்று என்று தெரிவித்தாராம்.
ஆக, தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது பிக் பாஸ்.