கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
இப்படி ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் ரத்து செய்யப்படுகிறது என்று பேச்சு கிளம்பியது। மேலும் கமல் ஹாஸன் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டார்கள்.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நிகழ்ச்சி குழு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறதாம்। நிகழ்ச்சியை வழக்கமாக துவங்கும் ஜூன் மாதத்திற்கு பதில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிவிருக்கிறார்களாம்.
மேலும் முந்தைய 3 சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.