மாண்டலே

மியான்மரில் சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த விமானம் அதிருஷ்ட வசமாக தப்பியது.

மியான்மர் நாட்டின் விமான நிறுவனவனமான  மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று  அந்நாட்டின் சுற்றுலா நகரான மாண்டலேவுக்கு சென்றது.   அந்த யுபி 103 ரக விமானத்தில் 82 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர்.

மியான்மர் நேரப்படி இன்று காலை சுமார் 9 மணிக்கு அந்த விமானம் தரை இறங்க முயன்றது.     இயந்திரக் கோளாறு காரணமக விமானத்தின் முன் சக்கரங்கள் கீழே இறங்கவில்லை.   இதனால் விமானி பின் சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி  தரை இறக்கி உள்ளார்.

அந்த விமானத்தின் முன்பகுதி தரியில் மோதி உராயந்தபடி தரை இறங்கியதில் பலரும் பதட்டம் அடைந்துள்ளனர்.  இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.    இந்த சக்கரங்கள் இறங்காதது குறித்து விமானம் பழுது பார்க்கபட உள்ளது.

இந்த ஒரு வார கால இடைவெளியில் மியான்மர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இரண்டாம் முறையாக ஏற்பட்டுள்ளது.