காபூல்

ப்கானிஸ்தானின் பிரபல பெண் பத்திரிகையாளரும் புகழ் பெற்ற அரசியல் விமர்சகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் ஆட்சியின் போது பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.   அத்துடன் புர்கா அணிவது கட்டாயமாக்கப்படிருந்தது.    இதை எதிர்த்து அங்குள்ள பெண்களுக்கு போராட முயன்றும் வாய்ப்பு அளிக்கப்படவிலை.   கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க படை எடுப்புக்கு பிறகு தாலிபன்கள் ஆட்சி முடிவடைந்தது.

அதன் பிறகு ஆப்கானிஸ்தான்  பெண்கள் முன்னேற்றம் தொடங்கியது.   ஆனால் இன்று வரைதாலிபன்கள் பெண்கள் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளனர்.   சமீபத்தில் காபுலில் நடந்த ஒரு தாக்குதலுக்கு பிறகு தாலிபன் இயக்க செய்தி தொடர்பாளர் சபியுல்லா உலகை அச்சுறுத்தும் மேற்கத்திய கலாசாரத்தால் ஆப்கனில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டு சமுதாயம் பாழாவதாக தெரிவித்தார்.

முன்னேறி வரும் மகளிர் சமுதாயத்தில் ஒருவரான மேனா மங்கல் தனது ஊடக வழ்க்கையை கோலோ தொலைக்காட்சியில் தொடங்கினார்.   அதன் பிறகு சம்சத் தொலைக்காட்சியிலும் பணி ஆற்றி உள்ளார்.  பெண்கள் கல்வி மற்றுமுரிமைகளுக்காக இவர் போராடி வந்தார்.    இவரது அரசியல் விமர்சனங்கள் பலரையும் கவர்ந்தது.

மேனாவின் புதுமை கருத்துக்களால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.   இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற கீழவையில்  கலாசார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.    அதிலிருந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.   மேனா இது குறித்து தனது சமூக வலை தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

பெண்கள் முன்னேற்ற எதிரிகள் தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.  அத்துடன் மே மாதம் 3 ஆம் தேதி அன்று அவர் வெளியிட்ட பதிவில் தமக்கு வந்த மிரட்டல்களின் தொகுப்பை பகிர்ந்திருந்தார்.    ஒரு வலிவான பெண்மணியாக தாம் மிரட்டலுக்கு அஞ்சவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கலையில் காபுல் நகர தெருவில் அவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.   பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் நடந்த இந்த கொலைச்சம்பவம் ஆப்கானிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.

இந்த கொலைக்க்  பல ஆர்வலர்கள்  கண்டனம், தெரிவித்துள்ளனர்.   ஏற்கனவே மேனா ஒரு முறை கடத்தப்பட்டதையும் அந்த கடத்தல்காரர்களை காவல்துறையினர் பிடித்து சிறையில் இருந்து அவர்கள் தப்பி உள்ளதையும் பலர் சுட்டிக் காட்டி உள்ளனர்.