அந்தாதுன் மலையாள ரீமேக் ‘பிரம்மம்’ டிரெய்லர் வெளியீடு….!

Must read

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் அந்தாதுன்.இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழில் அந்தகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் புகழ் இயக்குனர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார்.

அந்தாதுன் படத்தின் மலையாள ரீமேக் பூஜையுடன் ஆரம்பமானது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிருத்விராஜ் உடன் இணைந்து நடிகைகள் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா மற்றும் நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்க ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் பிரம்மம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பரபரப்பான டிரெய்லர் தற்போது வெளியானது.

More articles

Latest article