கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

Must read

இந்தூர்:

ந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சோதனை மற்றும் சிகிச்சை போன்ற ஐஐடியின் வழிமுறைகளை ஏற்று கொண்டத்திலேயே  மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உதவியது என்றார்.


30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தூர் மாநிலம், கொரோனா ஹாட் ஸ்பாட்டாக் மாறியுள்ளது. இங்கு, இதுவரை, 1176 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும், கொரோனா பாதிப்பால், 57 பேர் உயிரிழிந்ததுள்ளனர்.

இது குறித்து வெளியான புள்ளி விபரப்படி, இந்தூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் 4.85 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இது இந்தியா தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளது.   இதுவரை 107 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளதகவும் அதிகாரப் பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூரில் தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது, இதையடுத்து,  ஊரடங்கை விரைவில் விலகி கொள்ள அரசு விரும்புகிறது என்று சவுகான் தெரிவித்துள்ளார்.


ஆகையால், நாங்கள், பில்வாரா மாதிரியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, கொரோனா வைரஸ் சூழ்நிலையை எதிர் கொள்ள உள்ளோம். இந்தூரில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை சேகரிக்க முயற்சி செய்து வருகிறோம். இதற்காக இந்தூரில் உள்ள குடிமக்கள் அனைவரையும் சோதனை செய்ய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


கூடுதலாக, எனது தலைமையிலான அரசு, ஐஐடிடி வழிமுறைகளை, அதாவது, நோயை பாதிப்பு க்கு முன்பே கண்டறிதல், தனிமைப்படுத்துதல், நோயாளிகளை தனிமைப்படுத்தல் வார்டுக்கு அனுப்புதல், அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு, அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவரை உடனடியாக அதற்குண்டான வார்டுக்கு அவரை மாற்றுதல் போன்றவைகளை கடைபிடித்து வருகிறது என்று சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தூரில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து மே 3ம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இது  நகரின் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More articles

Latest article