பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான  வாகன ஓட்டுநர் சுனில் இன்னமும் தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பற்றி மலையாள திரையுலகில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் பரவி வருகின்றன.

ஓட்டுநர்  சுனில்,  நடிகை பாவனாவிடம் பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து, கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.

அப்போது நடிகை கீர்த்தி சுரேஷை குறிவைத்தார் சுனில். கீர்த்தி, முன்னாள் நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா 1980-களில் தமிழில் பிரபல நடிகையாக விளங்கினார். ராமாயி வயசுக்கு வந்துட்டா, சாவித்திரி, ரஜினியுடன் நெற்றிக்கண், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ்  நடித்துவருகிறார். இவர், தமிழில், ‘இது என்ன மாயமோ’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடர போன்ற பல படங்களில் நடித்துவருகிறார்.
கீர்த்தி சுரேஷை குறிவைத்த சுனில், அவரது வாகன ஓட்டுநருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். அந்த ஓட்டுநரிடம் தனது திட்டத்தைத் தெரிவித்தார். அவரும் சம்மதித்தார்.

 

‘ஒய்’ என தகவல் அனுப்பினால் கீர்த்தி சுரேஷை இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று கடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த்தைகளை பரிமாறிக் கொள்ள முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பி விட்டார். உடனே சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை வழிமறித்து கடத்திச் சென்றார்.  ஆனால் அதன் பிறகு தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால் சுனில் விட்டுவிட்டார்.

ஆனால், குடும்ப கவுரவம் கருதி இது குறித்து மேனகா குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இப்போது பாவனா விவகாரத்துக்குப் பிறகு, சுனில் குறித்த  தகவல்கள் வெளியானதும் இந்தத் தகவலை மேனகா குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

சுனில், கேரள திரைப்பட துறையினர் பலருக்கு நன்கு அறிமுகமானவர். இவரை கேரள நட்சத்திரங்கள், செல்லமாக, பல்சர் சுனில் என்று  அழைப்பார்கள்.

சுனில் ஓட்டுநராக மட்டுமின்றி, ஏஜெண்டாகவும் இருந்துள்ளார். அதாவது,  மலையாள திரை உலகினருக்கு வெளியில் செல்ல ஓட்டுநர்கள், வாகனங்கள் தேவைப்பட்டால் இவர் அனுப்பி வைப்பார்.

மலையாள திரைத்துறையின் பல சங்கங்களில் உறுப்பினர் அட்டையும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், தமிழ்ப் பட வாய்ப்புகள் குறைந்ததால் பாவனா தனது தாயாரோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு அவரிடம் முதலில் தற்காலிக டிரைவராக சுனில் பணிபுரிந்தார். அவரது குடும்பத்தினருடன் உரிமையாக சுனில் பழகினார். வீட்டுக்குள் சகஜமாக சென்று வரக்கூடிய அளவுக்கு நெருங்கினார். மேலும், பாவனா மூலம் மற்ற நடிகைகளுக்கு அறிமுகமானார்.

ஆனால் சுனில் மீது, பாவனாவின் தாய்க்கு சந்தேகம் இருந்துவந்தது. அவர் இது குறித்து பாவநஆவிடம் எச்சரித்து வந்தார்.

இந்த நிலையில், ஒரு நாள் பாவனா வீட்டில்  இல்லாத நேரத்தில் ல் அவரது படுக்கை அறைக்குள் சுனில் ரகசிய கேமராவை பொறுத்தினார்.  இதை பாவனாவின் தாயார் பார்த்து விட்டார். உடனே மகளிடம் இது குறித்து கூறி, சுனிலை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு பிரபல தமிழ்நடிகையின் முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான ஒருவரிடம், சுனில் வேலைக்கு சேர்ந்தார்.  அங்கும் நடிகரின் தற்போதைய மனைவியான நடன நடிகையுடன் நெருங்கிப் பழகி அவரது வீட்டிலும் ரகசிய கேமரா வைத்த போது சுனில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்தும் விரட்டப்பட்டார்.

இதனால் ஆத்திரமான சுனில் பாவனாவை கடத்தி நிறைய பணம் பெற்று கேரளவை விட்டே வெளியேற திட்டமிட்டார். ஆனால் சிக்கிக்கொண்டார்.