பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்: ஆளுநர் அதிரடி

Must read

சென்னை,

ஞ்ச புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர்  கணபதியை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதி, புதிய பணி நியமனத்துக்காக,  சுரேஷ் என்பவரிடம் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு காவல் துறையினரால் கையும், களவுமாக பிடிபட்டார்.

கணபதிக்கு உடந்தையாகவும், முகவராகவும் செயல்பட்டு வந்த பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய ஜாமின் மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை  பணியிடை நீக்கம் செய்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்  உத்தரவிட்டுள்ளார்.

More articles

Latest article