சென்னை:

யக்குனர் சங்க தலைவராக ஒருமனதாக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க ஏதுவாக ராஜினாமா  செய்வதாகவும்,  தேர்தலில் போட்டியிடாமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏற்படும் சங்கடங்களை அறிவேன் என்றும் தனது ராஜினாமா குறித்து பாரதிராஜா விளக்கம் அளித்து  உள்ளார்.

கடந்த மாதம் தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்க குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து,  தமிழக அரசு அமைத்த தயாரிப் பாளர் சங்க குழுவின் சார்பில் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே நடிகர் விஷால் இதுபோல  நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதவியில் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இரட்டை பதவியில் இருக்க விரும்பாத பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.