பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’  ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்..

Must read

பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’  ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்..

கடந்த ஆண்டு விளையாட்டு தொடர்பான மூன்று படங்களை உருவாக்கிய இயக்குநர் சுசீந்திரன், கொரோனைவை மையமாக வைத்து கதை தயார் செய்துள்ளார்.

ஊரடங்கு முடிந்து சினிமா ஷுட்டிங் நடத்த அனுமதி கிடைத்ததும், இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.

 இது கிராமத்து ‘திரில்லர்’ படம்.

ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பாராதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சுசீந்திரன்,இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் தனது ஊரிலும், சுற்றியுள்ள தேனி உள்ளிட்ட இடங்களிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கொரோனா ஊரையே அடித்து உலையில் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு கிராமத்தில் நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களை

இழையாக கொண்டு கதை நெய்துள்ளார், சுசீந்திரன்.

பாரதிராஜா உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் இதில் பங்கேற்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குச் சம்பளம் கிடையாது.

படத்தின் வியாபாரத்தில் பங்கு கொடுக்கப்படும்.

-பா.பாரதி.

More articles

Latest article